16314 அனர்த்தங்களும் மனித விலங்கு நடத்தைகளும்.

ஏ.எம்.றியாஸ் அஹமட். மருதமுனை 05: பசுமைப் பந்துகள், 224, காரியப்பர் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2021 (அச்சக விபரம் தரப்படவில்லை).

52 பக்கம், படங்கள், விலை: ரூபா 75.00, அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-624-98297-6-3.

மட்டக்களப்பு-கல்லடியில் கண்டதுவும் காண்பதுவும் கடற்பாம்புகளா அல்லது விலாங்கு மீன்களா?, காத்தான்குடியில் கடல் உயிரினங்கள் இறந்து கரையொதுங்குவதும் அல்லது கரையொதுங்கி இறப்பதும், அசாதாரண விலங்கு நடத்தைகள் அனர்த்த முன்னெச்சரிக்கைக்கு ஒரு கருவியாகப் பயன்படுத்தல், இலங்கையில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதிலுள்ள சவால்கள், வெள்ள அனர்த்தங்கள்: கற்றுக்கொள்ள வேண்டியவைகளிலிருந்து கற்கத் தவறிய பாடங்கள், இஸ்ரவேல் எரிகின்றது ஏன்? அந்நிய ஆக்கிரமிக்கும் தாவரங்களை (Invasive Alien Species Plants) முன்வைத்து ஒரு பார்வை, சிவப்பு மற்றும் மஞ்சள், பச்சை, கறுப்பு நிற மழைகள், சமீப காலமாக இலங்கையிலும் மற்றும் சில நாடுகளிலும் இடம்பெறும் அனர்த்தங்கள் மனிதனால் தூண்டப்பட்டவையாக இருக்குமா? ஆகிய எட்டு விடயங்கள் தொடர்பான தகவல்களை இந்நூல் கொண்டுள்ளது. நூலாசிரியர் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராவார்.

ஏனைய பதிவுகள்

14630 நெருநல் (கவிதைகள்).

இ.சு.முரளிதரன். யாழ்ப்பாணம்: மேதினிகா வெளியீடு, 34/3, செட்டித் தெரு, நல்லூர், 1வது பதிப்பு, ஜுன் 2015. (யாழ்ப்பாணம்: ஆகாயம் பதிப்பகம், இமையாணன், உடுப்பிட்டி). xii, 39 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 18×11.5