16316 இலங்கையின் கண்டல் காடுகள் : பிரயோசனங்களும் பிரச்சினைகளும்.

ஏ.எம்.றியாஸ் அஹமட். மருதமுனை 05: பசுமைப் பந்துகள், 224, காரியப்பர் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2021 (அச்சக விபரம் தரப்படவில்லை).

36 பக்கம், படங்கள், விலை: ரூபா 75.00, அளவு: 21×15.5 சமீ., ISBN: 978-624-98297-4-9.

கண்டல் என்ற சொல் களப்புகளின் கரையில் வளரும் விசேட இசைவாக்கங்களைக் கொண்ட தாவர இனங்களைக் குறிக்கின்றது. பொதுவாக கண்டல் தாவரங்கள் வளரும் சூழல் ‘மங்கல்” என அழைக்கப்படும். கண்டல் தாவரங்களின் அடிப்பகுதி கடற்பெருக்கின்போது அமிழ்ந்தும், கடல் வற்றின்போது வெளிப்படுத்தப்பட்டும் காணப்படும். இலங்கையில் ஏறத்தாள நாற்பதுக்கும் மேற்பட்ட இனங்கள் கண்டலாகவும் கண்டல்சார் மரங்களாகவும் பற்றைகளாகவும் பூண்டுகளாகவும் காணப்படுகின்றன. இந்த சூழற் தொகுதி உயர்ந்த உற்பத்தித் திறனையும் மிகுந்த வளத்தையும் கொண்டதாகும். இச்சிறுநூலில் ஆசிரியர் இலங்கையின் கண்டல் காடுகளை அடையாளப்படுத்துவதுடன் அவற்றின் பிரயோசனங்களையும், இக்காடுகளால் எழும் பிரச்சினைகளையும் விரிவாக விளக்குகின்றார். நூலாசிரியர் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராவார்.

ஏனைய பதிவுகள்

‎golden Casino

Content All american poker 5 hand live online | Aladdins Gold Casino Withdrawal Limits Golden Hearts Games Casino At A Glance Get Paid To Play