16317 டாக்குத்தரின் தொணதொணப்பு (கட்டுரைகள்).

எம்.கே.முருகானந்தன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

viii, 104 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-21-5.

டாக்டர் எம்.கே.முருகானந்தன் அவர்கள் தனது மருத்துவ சேவையின்போது சந்தித்த பாத்திரங்களை முன்னிறுத்தி தனது அனுபவப் பகிர்வாக சுவையானதொரு மருத்து ஆலோசனை நூலை எழுதியுள்ளார். இவை வீரகேசரியிலும், தினக்குரலிலும், ஜீவநதியிலும் அவ்வப்போது வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. ‘கொழும்பு அலட்டல்” என்ற 2000-2015 காலகட்டத்துப் பதிவுகளாக சின்ன வயதில் சந்தித்தது, மூச்சுத் திணறலுக்கு மருந்தில்லாத சிகிச்சை, டொக்டரின் மருந்துச் சிட்டை மகத்துவம், ஆஸ்த்மாவும் மதுவும், கடவுளிலும் மேலானவர்கள், மஹாத்மா தனது வார்த்தைகளுக்காக மீண்டும் சத்தியாக்கிரகம் செய்திருப்பார், தலைமுடி தப்பியது உயிர் பிரிந்தது, மலத்தோடு அட்டை போகும் அதிசய வியாதி, சுடாத துப்பாக்கி, வெளிநாட்டு மாப்பிள்ளையின் ஊர்ப் பொம்புளை, இரவிரவாகப் படித்தும் சோதனையில் கோட்டை, காணாமல் போன வேட்பாளர், நிறம் மாறும் போஸ்டர்களாக அவள் முகம், காது கேளாதவரின் மரண சாசனம், எனக்குச் சாக ஏதும் மருந்து தாங்கோ-பின் கதவில் கேட்கும் துயரக் குரல் என்பன இடம்பெற்றுள்ளன. 2020-2021 காலகட்டத்தில் எழுதப்பட்ட ‘பருத்தித்துறை தொணதொணப்புகளாக” மருந்தால் வருத்தம், தனியே மருந்தெடுக்க வராதீர்கள், நோயாளிகளைத் திட்டாதீர்கள் காரணியை விரட்டுங்கள், கண்ணீரோடு விடைபெறும் சவப்பெட்டிகள், நான் அப்படியான பொம்பிளை எண்டால், தேவார மழை, பாசக் கயிற்றில் தலையை ஓட்டியவர், தலைக்கு வந்தது தலைப்பாகையுடன், டொக்டர் பிழை விடுறார், எலி எலியைக் கடித்துவிட்டது, கண்டதும் தின்று குண்டு கையானாள், படுக்கையாய்க் கிடந்த அம்மா, அம்மா வந்தாள் புதினமான கதையோடு ஆகிய ஆக்கங்கள்இடம்பெற்றுள்ளன. நூலட்டையில் ‘டாக்டரின் தொணதொணப்பு” என்று அச்சிடப்பட்டுள்ளது. இந்நூல் 202ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

» Majestic Forest Slot

Content Casino dreamz Slots: EGT Spielautomatenspiele gebührenfrei spielen Forest Prince Slot Review Majestic Forest gratis zum besten geben Losmachen Diese Freispiele, Gratischips unter anderem vieles