16320 பாலியலும் பாலியல் பிறழ்வுகளும்.

க.கஜவிந்தன். கொழும்பு 13: அகரம் புத்தகசாலை, இல. 66, கொட்டாஞ்சேனை வீதி, 1வது பதிப்பு, 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை).

v, 200 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 1200., அளவு: 22.5×16 சமீ., ISBN: 978-955-45680-7-5.

பாலியல் ஓர் அறிமுகம், பால்நிலையும் பால்நிலை அடையாளக் குழப்பங்களும், பாலியல் உறுப்புக்கள், கருத்தரித்தலும் பாலின வேறுபாடும், மனித வளர்ச்சிப் பருவமும் பாலியல் பிரச்சினைகளும், இளமைப் பருவமும் பாலுணர்வும், பால்வினை நோய்கள், பாலியல் குறைபாடுகள், பாலியல் விலகல் நடத்தைகள், சிறுவர்களும் பாலியல் துஷ்பிரயோகங்களும், பால்வினைத் தொழிலும் அதன் பிரச்சினைகளும் ஆகிய பதினொரு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பாலியல் சார்ந்த கலைச்சொற்களும் அவற்றுக்கான விளக்கங்களும் பின்னிணைப்பாக இடம்பெற்றுள்ளன. கலாநிதி க.கஜவிந்தன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறையின் சிரேஷ்ட உளவியல் விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70035).

ஏனைய பதிவுகள்