16321 என் சுவாசமே : சுகாதார மேம்பாட்டு ஏடு.

ஆ.ஜென்சன் றொனால்ட். மிருசுவில்: ஆ.ஜென்சன் றொனால்ட், பொதுச் சுகாதார பரிசோதகர், உசன், 1வது பதிப்பு, தை 2022. (மிருசுவில்: மாதுளன் பிரின்டர்ஸ், உசன் சந்தி).

iv, 56 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-98956-0-7.

பொதுச் சுகாதார பரிசோதகராக தனது பயிற்சிக் காலத்திலும் சேவைக் காலத்திலும் பெற்றுக்கொண்ட சுகாதார விஞ்ஞான விடயங்களும், தனது தனிப்பட்ட தேடல் மற்றும் சுகாதார முகாமைத்துவ விஞ்ஞான முதுமாணிப் பட்டப்படிப்பில் (MSc in Health Management) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினூடாக பெற்றுக்கொண்ட கல்வியும் இந்நூலின் உருவாக்கத்திற்கு உறுதுணையாக இருந்துள்ளன. சுவாசம், வாயுப் பரிமாற்றம், நுண்ணங்கிகளால் ஏற்படும் பாதிப்பு, நுரையீரல் அழற்சி, மூச்சுக்குழல் அழற்சி, காசம், கோவிட்-19, கொரோனா நுண்மியின் திரிபுகள், தனிமைப்படுத்தல், அறிகுறிகளற்ற கொரொனா நோயாளரை வீட்டிலே பராமரித்தல், கொரொனாத் தொற்றை இனங்காணல், முகக்கவசம் அணிதல், கைகளைத் தூய்மையாக்கல், சுவாசத் தொகுதியின் ஆரோக்கியத்தில் உயிரற்ற கூறுகளால் ஏற்படும் பாதிப்புகள், புகைப்பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புகள், வாய்ச் சுகாதாரம், ஆரோக்கியத்துக்கான சுவாசப் பயிற்சிகள் ஆகிய 17 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்