16322 சுகவிழி-பொது சுகாதார மேம்பாட்டு ஏடு.

ஆ.ஜென்சன் றொனால்ட். பருத்தித்துறை: கல்வி வெளியீட்டுப் பிரிவு, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2019. (பருத்தித்துறை: எஸ்.பி.எம். பிரின்டர்ஸ்).

viii, 137 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×16 சமீ., ISBN: 978-624-5054-00-8.

சுகவிழி பொது சுகாதார மேம்பாட்டு ஏடானது பொது மக்களுக்கும் சுகாதார சேவை ஊழியர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் தொற்று நோயின் தாக்கம் பற்றியும் அவற்றின் கட்டுப்பாடு பற்றியும் விழிப்புணர்வூட்டும் வகையில் மிக எளிய நடையில் வெளிவந்துள்ளது.  இந்த நூலானது இலங்கையில் அறிவிக்கப்படவேண்டிய (Notifiable Communicable Diseases) தொற்று நோய்கள் குறித்தும் தொற்றா நோய்களின் கட்டுப்பாடு, நுளம்புக் கட்டுப்பாடு, வாய்ச் சுகாதாரம், தாய்-சேய் நலன், உணவுப் பாதுகாப்பு, புதைபொருள் கட்டுப்பாடு, தடுப்பு மருந்தேற்றல், தனிநபர் சுகநலம் மற்றும் நஞ்சற்ற பழங்களின் உற்பத்தி எனப் பல்வேறுபட்ட  விழிப்புணர்வுக் கட்டுரைகளையும் தாங்கி வெளிவந்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சுகாதார முகாமைத்துவத்தில் முதுவிஞ்ஞானமாணிப் பட்டத்தை (MSc in Health Management) பெற்ற இந்நூலாசிரியர் பொதுச் சுகாதார பரிசோதகராக பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடமையாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்