16324 ஹிஜாமா எனப்படும் இரத்தம் குத்தியெடுக்கும் மருத்துவம் (அத்திப் புன்நபவீ-நபி வழி மருத்துவம்).

முஹம்மது ரஸீன்-மழாஹிரி. குருணாகலை : தாருல் குர் ஆன் வெளியீட்டுப் பணியகம், இல. 100, கண்டி வீதி, மல்லவப்பிட்டிய, 1வது பதிப்பு, நவம்பர் 2020. (குருணாகலை: அனுர பிரின்டர்ஸ், கண்டி வீதி).

xii, 13-56 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 20×14 சமீ., ISBN: 978-624-95307-9-9.

எழுத்துப் பணியில் ஈடுபட்டுள்ள மௌலவி முஹம்மத் ரஸீன் அவர்கள் இதுவரை தமிழில் 72 நூல்களும், சிங்கள மொழியில் 20 நூல்களும், ஆங்கிலத்தில் 3 நூலும் ஆக மொத்தத்தில் 95 நூல்களை எழதி வெளியிட்டள்ளார். உள்ளூர் வெளியூர் பத்திரிகைகளிலும் மாத இதழ்களிலும் கட்டுரைகளை எழுதி வருகிறார். தற்பொது அறபுக் கல்லூரி ஒன்றில் பணிபுரியும் இவர் மாவட்டம் மற்றும் நாடளாவிய ரிதியில்மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் நலன்புரி நிலையம், இஸ்லாமிய விவாக விவாகரத்து சமாதான நிலையம்,அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆகிய அமைப்புகளில் தொண்டராகப் பணியாற்றுகின்றார். இந்நூலில் ஹிஜாமா எனப்படும் இரத்தம் குத்தியெடுக்கும் மருத்துவம் பற்றி விளக்கியிருக்கிறார். ஹிஜாமா என்றால் இரத்தம் குத்தி எடுக்கும் சுன்னத்தான வைத்திய முறையாகும். ‘ஹிஜாமா” என்ற அரபி வார்த்தை ‘உறுஞ்சுதல்” என்று அர்த்தப்படுகின்றது. கப் (உரி) அல்லது கோப்பையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி, பின்னர் நமது தோல் மேற்பரப்பில் வைத்து தூய்மையற்ற அல்லது கெட்ட இரத்தக் கழிவுகளை உடலின் பல்வேறு இடங்களில் இருந்து வெளியேற்றும் மருத்துவ முறை தான் ஹிஜாமா (Hijama) எனப்படுகின்றது. ஹிஜாமா செய்தால் ஏற்படும் முதன்மையான பயனும், நன்மையும் என்னவென்றால் இது நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறை (சுன்னத்), அதற்கான நன்மைகள் இவ்வுலகத்திலும், மறுமை நாளிலும் கிடைக்கும். இந்த ஹிஜாமா இரத்த உறுஞ்சுதல் மூலம் இரத்த ஓட்டத்தை சமச்சீர் செய்து  Kinetic energy என்ற ஆற்றலை அதிகப்படுத்துகிறது. இது இரத்தத்தில் இருந்து நச்சுகள் மற்றும் பிற கழிவுப் பொருட்களை அகற்றுகிறது. இதனால் சில வகையான நோய்கள் துரிதமாக குணமடைய உதவுகிறது எனக் குறிப்பிடுகிறார்.‪

ஏனைய பதிவுகள்