16326 தொல்லை தரும் தொற்றுநோய்கள். ச.முருகானந்தன். கண்டி: ஈஸ்வரன் பதிப்பகம், 126/1, கொழும்பு வீதி, 1வது பதிப்பு, 2018. (கண்டி: D.H. பிரின்ட் ஹவுஸ்).

vii, 120 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 22.5×16 சமீ., ISBN: 978-955-63041-6-0.

தொற்று நோய்கள், நுளம்பினால் பரவும் நோய்கள், தாய்ப்பாலூட்டல் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும், காய்ச்சலும் அதன் சவால்களும், டெங்கை முற்று முழுதாக அழிக்க முடியாதா?, வயிற்றோட்டம், தொண்டை-காது-மூக்கு தொற்றுகள், தொண்டையில் ஏற்படும் அழற்சி, நிமோனியா, நீர் வெறுப்பு நோய், கொப்பிளிப்பான் நோய்க்கு மருந்து அவசியமா?, செங்கண்மாரி நோய், சிறுநீரக தொற்று, சிகாவைரஸ் பாலுறவால் தொற்றுமா?, காதுத் தொற்று, மூளைக்காய்ச்சல், எபொலோ வைரஸ் தொற்று, கட்டுப்பாட்டுக்குள் வருகின்ற குக்கல், தொழுநோய், நெருப்புக் காய்ச்சல், கட்டுக்கள், கிருமிகள் எல்லாமே ஆபத்தானவையா?, பால்வினை நோய்கள், எயிட்ஸ் நோயின் பரிமாணங்கள், எயிட்ஸ் அபாயம் இன்னும் நீங்கவில்லை, எயிட்ஸ் நோயாளர்களின் பிரசவம், ஆபத்தான தொற்றுநோய் காசநொய், அன்ரிபயாக்ரிஸ் மருந்துகளுக்கு எதிராக கிளர்ந்தெழும் நுண்ணுயிர்க் கிருமிகள் ஆகிய 28 தலைப்பகளில் தொற்றுநோய்கள் பற்றி எழுதப்பட்ட விழிப்புணர்வுக் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. மனிதநேய மருத்துவராக கஸ்;டப் பிரதேசங்களிலிருந்து நீண்டகாலம் பணியாற்றிய அனுபவங்களிலிருந்தும் தனது மருத்துவ அறிவு மற்றும் தேடல் மூலமும் மருத்துவர் ச. முருகானந்தன் இலகுவாக நோய்கள் பற்றிய விழிப்புணர்வினை எம்மிடையே ஊட்டிவருகிறார். முழுநேர மருத்துவராக பொது வெளியில் அவர் எழுதிவரும் அறிவுசார்ந்த மருத்துவக் கட்டுரைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70053).

ஏனைய பதிவுகள்