செ.நாகநாதர். சங்கானை: மகப்பெறுவும் பிணிதீர் மனையும், 2வது பதிப்பு, 2002, 1வது பதிப்பு, 1984. (பெங்களூர் 560 053: எஸ்.வி.எண்டர்பிரைசஸ், 59, 1வது மாடி, எஸ்.எம்.ரோடு, காட்டன்பேட்).
(8), 24 பக்கம், விளக்கப்படம், விலை : குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.
இந்நூலின் முதற்பதிப்பு 1984இல் சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியில் யாழ்.லயன்ஸ் கழகத் தலைவர் பேராசிரியர் சரவணபவனால் வெளியிட்டுவைக்கப்பட்டது. இந்நூலின் வெளியீடும், அன்றைய தினம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த நீரிழிவு பற்றிய கருத்தரங்கும் பரவலாக மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தியிருந்ததுடன் சர்வதேச நீரிழிவு விழிப்புணர்வுக்கான பிராந்திய விருதினை வட்டுக்கோட்டை லயன்ஸ் கழகத்திற்குப் பெற்றுத் தந்திருந்தது. சலரோகம், இன்சுலினின் முக்கிய செயற்பாடுகள், அபாய அறிகுறிகள், தீய விளைவுகள், சலரோகத்துடன் வாழ்வது, நீரிழிவு நோயாளர்களின் எதிர்காலத்தைத் திட்டமிடல், நீரிழிவுக்காரர் செய்யக்கூடாதவை, பாதங்களின் பாதுகாப்பு, நீரிழிவு வியாதியைக் கண்டுபிடிக்கச் சில சோதனைகள், சிறுநீர் சோதனைகள், குருதியில் சோதனை, சலரோகத்தில் உபயோகிக்கப்படும் வைத்திய முறைகள், இன்சுலின், குறைவான நேரம் இயங்கும் இன்சுலின், கூடுதலான நேரம் இயங்கும் இன்சுலின், சலரோகக் குளிசைகள், சல்பனையில் யூரியாக்கள் ஆகிய சிறு பிரிவுகளின்கீழ் நீரிழிவு நோய் பற்றி இந்நூல் விளக்குகின்றது.