சி.ரகுராமன், பா.பாலகோபி. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2022. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
vii, (3), 76 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 750., அளவு: 21.5×14.5 ISBN: 978-624-6164-33-1.
குழந்தையின்மை பற்றிய தெளிவான மருத்துவரீதியிலான விளக்கத்தை அளித்து அதற்குரிய நவீன சிகிச்சை முறைகளை விளக்கிக் கொள்வதன் மூலம் குடும்பங்களில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைக் குறைப்பதும், எவ்வித தயக்கமுமின்றி மருத்துவ ஆலோசனையை நாட தம்பதியினரை உற்சாகப் படுத்துவதும் அதன் மூலம் நாளடைவில் குழந்தைப்பேற்றை அடைவதற்கு உதவவதும் இந்நூலின் நோக்கமாகும். அறிமுகம், கருத்தரித்தல் தாமதமடைவதற்கான காரணிகள்-பெண்கள், கருத்தரித்தல் தாமதமடைவதற்கான காரணிகள்-ஆண்கள், கருத்தரித்தல் தாமதமடைவதை இனங்காணும் பரிசோதனைகள், கருத்தரித்தலில் செல்வாக்குச் செலுத்தும் வாழ்க்கைமுறை மாற்றங்களும் நிகழ்வுகளும், கருத்தரித்தல் தாமதமடைவதற்கான காரணிகளுக்கான சிகிச்சைமுறைகள்-பெண்கள், கருத்தரித்தல் தாமதமடைவதற்கான காரணிகளுக்கான சிகிச்சைமுறைகள்-ஆண்கள், செயற்கைமுறைக் கருக்கட்டலும் அதற்கான ஆயத்தப்படுத்தலும், செயற்கைமுறைக் கருக்கட்டல் சிகிச்சையின் படிமுறைகள், முட்டை விந்து, கருத் தானமும், செயற்கை முறைக் கருக்கட்டலும் ஆகிய 10 இயல்களில் இந்நூல் ஒளிப்பட உதவியுடன் தெளிவுபடுத்தி எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 69981).