16329 தாயாகிய தனித்தவம் : பெண் நோயியல் மற்றும் மகப்பேற்றியல்சார் மருத்துவக் கட்டுரைகள்.

கந்தையா குருபரன் (மூலம்), நாகேந்திரம் நவராஜ் (பதிப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

viii, 128 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 600., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-624-5881-53-6.

ஆரம்பக் கர்ப்பகாலம், கர்ப்பகாலச் சிகிச்சை நிலையத் தரிசிப்புகள், கர்ப்பகால உணவுப் பழக்கம், கருச்சிதைவு, கர்ப்பகாலக் குருதிச்சோகை, கர்ப்பகாலக் குருதி அமுக்கம், கர்ப்பகால நீரிழிவு, உடற்பயிற்சியும் கர்ப்பகாலமும், கர்ப்பகாலக் குருதிப்போக்கு, சுகப்பிரசவம், சத்திரசிகிச்சைப் பிரசவம், பிரசவத்தின் பின்னான தாயின் கவனிப்பு, குடும்பத் திட்டமிடல், மலரும் யௌவனம், மாத சுகவீனமும் மருத்துவ விளக்கங்களும், குடும்ப வன்முறை, மாதவிடாய் நிறுத்தம், மாதவிடாய் நிறுத்தத்தின் பின்னரான இனப்பெருக்க சுகாதாரம், மாதவிடாய் நிறுத்தத்தின் பின்னரான இரத்தப் போக்கு, கர்ப்பப்பைப் புற்றுநோய், கருப்பைக் கழுத்துப் புற்றுநோய், சூலகப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், பெண்களில் ஏற்படும் குடலிறக்கம், முட்டைப்பை நீர்க் கட்டி நோய், வெள்ளை படுதல், குழந்தைப் பேறின்மை ஆகிய 27 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஒரு பெண்நோயியல் மற்றும் மகப்பேற்றியல் மருத்துவ நிபுணராக வைத்திய கலாநிதி கந்தையா குருபரன் சந்தித்த தனது நோயாளர்கள் எழுப்பியிருந்த கேள்விகளே அவரது அறிவுத்தேட்டத்தின் மூலங்களாகியுள்ளன. தாய்மை, பெண்கள் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் தொடர்பான பல சந்தேகங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் தற்போதுள்ள மருத்துவ விஞ்ஞான அறிவின்மூலம் விளக்கங்களையும் தீர்வுகளையும் கொடுக்கும் முயற்சியாக இந்நூல் அமைந்துள்ளது.

233ஆவது ஜீவநதி வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்