16332 சம்ஸ்கிருதத்தில் புராதன இந்திய அறுவைச் சிகிச்சை மருத்துவம்: சுஸ்ருத சம்ஹிதையை அடிப்படையாகக் கொண்டது.

சுவஸ்திகா ரவிச்சந்திரன். யாழ்ப்பாணம்: தூண்டி இலக்கிய வட்டம், 141, கேணியடி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2019. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், இல. 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

xvii, 121 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-95610-0-7.

 ‘சுஸ்ருத சம்ஹிதை” பண்டைய இந்தியாவில் கிமு 800-இல் வாழ்ந்த ஆயுர்வேத மருத்துவ அறுவை சிகிச்சை முனிவரான சுஸ்ருதர் என்பவர் இயற்றிய அறுவை சிகிச்சைக்கான சமஸ்கிருத மொழி மருத்துவ நூல் ஆகும். சுஸ்ருத சம்ஹிதை நூலில் வேத கால மருத்துவ முறையின்படி, பல்வேறு மருத்துவ துறைகளுக்கான விளக்கங்கள் உள்ளன. மூலநூலில் காணப்படும் பல்வேறு அத்தியாயங்கள் அறுவை சிகிச்சைக்கான பயிற்சிகள், கருவிகள் மற்றும் செயல்முறைகளை விளக்குகின்றன. ‘சுஸ்ருத சம்ஹிதை” நூலின் தற்போதைய வெளியீடு 186 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்நூலில் 1,120 நோய்கள், 700 மூலிகைச் செடிகள், கனிமங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட 64 மருந்துகள், விலங்குகளிடமிருந்து தயாரிக்கப்பட்ட 57 மருந்துகள், ஆழமான உடற்கூற்றியல் பாடங்கள் முதலிய விவரங்களை உள்ளடக்கியுள்ளது. சுஸ்ருதசம்ஹிதையின் மூலமாக 600 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை இயந்திரங்களையும், பாரம்பரிய அறுவை சிகிச்சையாளர்களின் அனுபவங்களையும், வேத இலக்கியங்களில் காணப்படும் மருத்துவ தகவல்களின் ஒருங்கிணைப்பை இந்நூலில் பெற முடிகின்றது. சுவஸ்திகா ரவிச்சந்திரன் எழுதியுள்ள இந்நூல் வழியாக புராதன இந்திய அறுவை சிகிச்சை பற்றிய பல்வேறு தகவல்களை அறியமுடிகின்றது. இந்திய மருத்துவப் பாரம்பரியம், புராதன இந்திய மருத்துவம், சுஸ்ருதசம்ஹிதையின் அமைப்பும் உள்ளடக்கமும், சிறப்பும் தனித்துவமும் ஆகிய அத்தியாயங்களின் வழியாக சம்ஸ்கிருதத்தில் புராதன இந்திய அறுவைச் சிகிச்சை மருத்துவம் பற்றி இந்நூல் பற்றி விரிவான விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Nachfolgende Besten Apple

Content Untersuchung Des Besten Apple Pay Erreichbar Casinos Vergleich Ein Zahlungsmöglichkeiten Unter einsatz von Einem Handyrechnung In Alpenrepublik Fazit Hinter Erfahrugen Über Apple Pay Casinos