தியாகராஜா சுதர்மன். யாழ்ப்பாணம்: தி.சுதர்மன், கோகுலம், 23/2, மெமோரியல் வீதி, மானிப்பாய், 1வது பதிப்பு, 2021. (யாழ்ப்பாணம்: அன்றா பிறிண்டேர்ஸ், இல. 356 A, கஸ்தூரியார் வீதி).
xviii, 296 பக்கம், விலை: ரூபா 1000., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-626-97544-0-9.
பொன்னாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட வைத்தியர் தியாகராஜா சுதர்மன் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையிலும், உயர் கல்வியை சுழிபுரம் யாஃவிக்டோரியா கல்லூரியிலும், சித்த மருத்துவப் பட்டப்படிப்பை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை (கைதடி-2003)யிலும், உளவளத்துணை டிப்ளோமா கற்கை நெறியினை இலங்கை தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்திலும் (2005), உணவும் போசாக்கும் பட்டப்பின் டிப்ளோமா கற்கை நெறியினை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாய பட்டப்பின் கற்கைகள் நிறுவனத்திலும் (2009) பூர்த்தி செய்துள்ளார். 2005இல் திருக்கோணமலை மாவட்டத்தில் முதல் நியமனத்தைப் பெற்று 2012 வரையான காலப்பகுதியில் மருத்துவ சேவையை ஆற்றியதுடன் 2012-2017 வரை இலவச சித்த மருந்தகம் ஆனைக்கோட்டையிலும், 2017முதல் இன்றுவரை இலவச சித்த மருந்தகம் யாழ். மாநகர சபையின் நகரக் கிளையிலும் பணியாற்றிவருகிறார். இந்நூல் எம்மவரின் ஆரோக்கியமான பாரம்பரிய உணவுப் பழக்கம் பற்றிய பல தகவல்களுடன் வெளிவந்துள்ளது. உணவு-அறிமுகம், உணவும் ஐம்பூதங்களும், உணவும் ஆரோக்கியமும், உணவுப்பாதுகாப்பு, உணவு உட்கொள்ளல், பத்தியாபத்தியம், பெண்களின் நலனில் உணவின் பங்கு, தாவர இரசாயனங்கள், தாம்பூலம் தரித்தல், உணவில் சில விஷேட பகுதிகள், குழந்தைகள், சிறுவர்கள், முதியோர்களுக்கான உணவுகள், பாரம்பரிய உணவுகள் ஆகிய பன்னிரு அத்தியாயத் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.