16341 கேக் கலையின் நுட்பங்கள்.

அருந்ததி துரைராஜா. கொழும்பு 6: திவ்யா கலைக்கூடம், 351-7A, 1/1 காலி வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஆடி 2010. (கொழும்பு 6: கனவு நிலையம், வெள்ளவத்தை).

ix, 86 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 375., அளவு: 23×16 சமீ., ISBN: 978-955-50249-1-2.

அருந்ததி துரைராஜா, அச்சுவேலி தொழிற்பேட்டையில் பழவகை பதனிடும் தொழிற்சாலையின் இரசாயன நிபுணராகவும், முகாமையாளராகவும் பணியாற்றியவர். கொழும்பில் திவ்யா கலைக்கூடம் என்ற நிறுவனத்தை நிறுவி இயக்கிவருகிறார். நூலின் ஆரம்பத்திலேயே கேக்கிற்குத் தேவையான செய்முறைப் பொருட்கள், முக்கிய அளவுகள், கேக் செய்யும்போது கவனிக்கவேண்டிய விடயங்கள் என்பன விளக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து 34 வகையான கேக்வகைகள் அவற்றின் வர்ணப்படங்களுடன் தரப்பட்டுள்ளன. ஐசிங் முறைகளும் 13 வகையான பூக்களை செய்யும் முறையும்  படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. இக்கலையை வகுப்புகளுக்குச் சென்று கற்க முடியாதவர்கள் வீட்டிலிருந்தபடியே தாமாகக் கற்றுக்கொள்ளும் வகையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50938).

ஏனைய பதிவுகள்

Thunderstruck Slot Remark 2024 Play On line

Posts Online slots Application Organization Thunderstruck Scatters, Totally free Revolves, Wilds & Special Signs Head Provides However the section would be the fact including prices