16342 கிராமப்புறச் சமையல் கலையின் நுட்பங்கள்: பகுதி 1.

அருந்ததி துரைராஜா. கொழும்பு 6: திவ்யா கலைக்கூடம், 351-7A, 1/1 காலி வீதி, வெள்ளவத்தை, 2வது பதிப்பு, 2014, 1வது பதிப்பு, ஆடி 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை).

ix, 70 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 300., அளவு: 23×16 சமீ., ISBN: 978-955-50249-1-2.

பாரம்பரிய உணவுமுறைகளில் 94 வகையானவற்றைத் தேர்ந்து, அவற்றைச் சமைக்கும் முறையினை தெளிவாகப் பதிவுசெய்துள்ளார். செய்முறை, அளவுப் பிரமாணங்கள், படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. புளி, தயிர், சக்கரைச்சாதங்கள், பிட்டு வகைகள், மற்றும் ஆரோக்கிய உணவுவகைகளான களிவகைகள் என்பனவும், கறி, குழம்பு, பிரட்டல், வறுவல் எனப் பல்வேறு சைவ, அசைவ உணவு வகைகள் சமைக்கும் வழிமுறைகள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. நூலாசிரியரின் திவ்வியா கலைக்கூடம் கொழும்பில் 1996இலிருந்து இயங்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62710).

ஏனைய பதிவுகள்