16344 பாரம்பரிய உணவுக் கலாச்சாரம்.

ரஜிதா அரிச்சந்திரன். யாழ்ப்பாணம்: ரஜிதா அரிச்சந்திரன், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், இணை வெளியீடு, பத்தரமுல்ல: கலாசார அலுவல்கள் திணைக்களம், 1வது பதிப்பு, 2022. (யாழ்ப்பாணம்: மெகா பதிப்பகம், 41, றக்கா வீதி, கச்சேரியடி).

32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ.

யாழ்ப்பாண பிரதேச கலாசார உத்தியோகத்தராகப் பணியாற்றும் இந்நூலாசிரியர் யாழ்ப்பாணப் பிரதேச செயலகப் பிரிவில் வழக்கிலிருந்த உணவுப் பண்டங்களைப் பற்றிய விபரங்களை குறிப்பாக அவற்றிலுள்ள போசணைச் சத்து, அவை எவ்விதம்  எமது உடலை உறுதியாக்குகின்றது என்பன போன்ற விபரங்களைத் தந்துள்ளார். இந்நூலில் நெல்லரிசிச் சோறு, பொங்கல், இடியப்பம், புட்டு, அப்பம், தோசை, இட்டலி, வடை, முறுக்கு, பால்ரொட்டி, சீனி அரியதரம், பயித்தம் பணியாரம், கொழுக்கட்டை/மோதகம், பால்க் கஞ்சி, களி, பனங்காய்ப் பணியாரம், கூழ், புளிக்கஞ்சி, மீன் குழம்பு, இறைச்சிக் கறி, திருக்கைக் கறி, சுறாக்கறி, சொதி, சம்பல், சத்துமா, தானியவகை உணவுகள், பொரி உருண்டை, எள்ளுருண்டை, கச்சான் அலுவா, லட்டு, பனாட்டு, பழஞ்சோறு ஆகிய உணவுப் பண்டங்கள் பற்றிய தகவல்களைத் தொகுத்துத் தந்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

16937 தமிழொளி : வன்னியூர்க் கவிராயர் சிலை திறப்புவிழா மலர்.

கனகரவி (மலராசிரியர்). வவுனியா: வன்னியூர்க் கவிராயர் கலை இலக்கியப் பேரவை, 1வது பதிப்பு, 2015. (வவுனியா: லேற்றஸ் பிறின்டர்ஸ், வைரவபுளியங்குளம்). xvi, 105 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28.5×20சமீ., ISBN: 978-955-7821-01-6. வவுனியா