16346 கலைச்சொற் களஞ்சியம்: வணிகம், முகாமைத்துவம், கணக்கீடு, நிதி (ஆங்கிலம்-தமிழ்).

வடிவேல் முருகன் தர்மதாசன், மகாதேவன் கருணாநிதி. கொழும்பு 9: இஸ்லாமிக் புக் ஹவுஸ் வெளியீடு (IBH Publications), 1வது பதிப்பு, 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை).

iv, 381 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 22×15 சமீ.

இக்கலைச்சொற் களஞ்சியம், வணிகம், முகாமைத்துவம், கணக்கீடு, நிதி என்னும் துறைகளின் ஆங்கிலக் கலைச்சொற்களின் தமிழாக்கத்தைத் தரும் வகையில் வெளிவந்துள்ளது. வடிவேல் முருகன் தர்மதாசன், பேராதனைப் பல்கலைக்ககழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் பீடத்தின் முதுநிலை விரிவுரையாளராகப் பல ஆண்டுக் காலமாக சேவை அனுபவம் கொண்டவராக விளங்குபவர். மகாதேவன் கருணாநிதி,  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் முதுநிலை விரிவுரையாளராகச் செயற்பட்டு வருகின்றார். இருவரும் 20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட துறைசார் கல்விப்புல அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு இக்கலைச்சொற்றொகுதியை தயாரித்துள்ளனர். (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 209928).

ஏனைய பதிவுகள்

Caesars Slots

Content So Funktioniert Der Spielautomat Von Btg: Cleopatra Slot Free Spins Ludo Star: Online Dice Game Jedes Scatter gleicht einem Goldbarren, auf dem die Buchstaben