16352 Through the Fire Zones : Photographs of Amarathaas in Sri Lanka’s War Zones.

அமரதாஸ். சுவிட்சர்லாந்து: வைட் விஷன் ஸ்ரூடியோ (Wide Vision Studio), 1வது பதிப்பு, மே 2022. (தமிழ்நாடு: அச்சக விபரம் தரப்படவில்லை).

400 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ஸ்டேர்லிங் பவுண்ட் 50.00, அளவு: 22×30.5 ISBN: 978-3-033-08396-7.

முன்னாள் போராளியான அமரதாஸ், இலங்கையின் இறுதிப் போர்க்காலத்திலே, கிளிநொச்சியில் இயங்கிய ஊடக அறிவியற் கல்லூரியில் ஒளிப்பட ஊடகவியல் விரிவுரையாளராகப் பணயாற்றியவர். ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 2009இல் அது முடிவடையும் வேளையில் பாதிப்புக்குள்ளான வன்னி மண்ணில் சுயாதீன ஊடகராகச் செயற்பட்ட இவர் செய்தி மதிப்பும் தொழில்நுட்பத் தரமும் கொண்டதும் போர்சார்ந்ததுமான பல நூற்றுக்கணக்கான ஒளிப்படங்களை உருவாக்கியிருந்தார். அவற்றில் நானூறுக்கும் மேற்பட்ட ஒளிப்படங்களை உள்ளடக்கியதாக இவ்வொளிப்படத் தொகுப்பு வெளிவந்துள்ளது. அனைத்தும் கறுப்பு-வெள்ளைப் படங்களாக இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே 1999 இல் ‘இயல்பினை அவாவுதல்: அமரதாஸ் கவிதைகள்” என்ற கவிதைத் தொகுதியையும், 2006இல் ‘வாழும் கணங்கள்: அமரதாஸ் ஒளிப்படங்கள் (Living Moments: Photographs of Amarathaas)” என்ற ஒளிப்படத் தொகுப்பினையும் வெளியிட்டுள்ள இவரது மூன்றாவது நூல் இதுவாகும்.

ஏனைய பதிவுகள்