கௌரி சந்திரன் ஐங்கரன். யாழ்ப்பாணம்: திருமதி கௌரி சந்திரன் ஐங்கரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2023. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(4), 515 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21.5 சமீ., ISBN: 978-1-7389808-3-3.
ஹிந்துஸ்தானி இசை, ஹிந்துஸ்தானி சங்கீத லிபி முறை, ஹிந்துஸ்தானி இசையில் இராகங்கள், ஹிந்துஸ்தானி இசைத் தாளங்கள், ஹிந்துஸ்தானியில் இசை உருப்படிகள், கர்நாடக சங்கீதத்தில் ஹிந்துஸ்தானி சங்கீதத்தின் செல்வாக்கு, ஐரோப்பிய இசை முறை நமது இசைமுறைக்கு வழங்கியுள்ள அம்சங்கள், சென்றவால்யூ (சதமதிப்பு), உருப்படி வகை, மேல்நாட்டு சங்கீதத்தில் இசைக் குறியீடுகள், ஸ்வரங்களின் காலப்பிரமாணம், கால அளவைக் காட்டும் குறியீடு, மேலைத்தேய இசைக்கும் கர்நாடக இசைக்கும் இடையிலான ஒற்றுமை வேற்றுமைகள், நாட்டார் பாடல்களின் கலாசாரப் பின்னணி, தொழிற் பாடல்கள், கிராமிய இசைப் பாடல்கள், கதாகாலட்சேபம், கூட்டு நிகழ்ச்சி, வரலாற்றில் புவியியலுக்கும் சங்கீதத்திற்கும் இடையே உள்ள தொடர்பு, இந்தியாவில் சங்கீதத்தின் வளர்ச்சி வரலாறு, நரம்புக் கருவி, யாழ் வகை, பண்டைக்கால நூல்களில் காணப்படும் யாழ் வகை, இசைத்துறை சார்ந்தோரின் வாழ்க்கை வரலாறுகள் என இசைத்துறை சார்ந்த இன்னோரன்ன தகவல்களை 97 தலைப்புகளின் கீழ் இந்நூலில் ஆசிரியர் பதிவுசெய்திருக்கிறார்.