சுகன்யா அரவிந்தன். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park ,1வது பதிப்பு, 2020. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).
xii, 112 பக்கம், ஒளிப்படம், விலை: ரூபா 460., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-685-165-6.
சங்கீதத்தின் மேன்மை, சங்கீத ஆசிரியர், இசை கற்பித்தல் பொறிமுறை, சங்கீதம் கற்பிப்பதன் நோக்கங்களும் முறைகளும், கற்பித்தல் துணைச் சாதனங்கள், பின்னிணைப்பு, சங்கீதக் கலை வளர்த்த வாக்கேயகாரர்கள் ஆகிய ஏழு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையில் முதுநிலை விரிவுரையாளராகக் கடமையாற்றும் கலாநிதி சுகன்யா அரவிந்தன் சமூகவியல், கர்நாடக இசை ஆகிய இரு துறைகளிலும் யாழ்.பல்கலைக் கழகத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27258).