16357 இலங்கைத் தமிழர் இசை வரலாறு: ஓர் அறிமுகம்.

சுகன்யா அரவிந்தன். யாழ்ப்பாணம்: கீதாஞ்சலி வெளியீடு, 1வது பதிப்பு, 2022. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

viii, 87 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-624-5901-18-0.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இசைத் துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றுகின்ற கலாநிதி சுகன்யா அரவிந்தன், சமூகவியல், கர்நாடக இசை ஆகிய இரு துறைகளிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பட்டத்தைப் பெற்றவர். கர்நாடக இசையில் முனைவர் பட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகத்திலும், பரத நாட்டியத்துக்கான முது தத்துவமாணிக் கற்கைநெறியினை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் பூர்த்திசெய்தவர். இந்நூலில் இலங்கைத் தமிழரின் இசை வரலாற்றினை தமிழ்ப் பண்பாடும் இசையும், இலங்கைத் தமிழர் இசை வரலாறு, தேவரடியார் மரபு, இசை வேளாளர் மரபு, இசை வளர்த்த நாடக மரபு, புராணபடன மரபு, கதாகாலேட்சப மரபு, ஓதுவார் மரபு, நிறைவு ஆகிய இயல்களின் வழியாக விளக்கியிருக்கிறார்.

ஏனைய பதிவுகள்

12528 – ஈழம்-மட்டக்களப்பு மாநிலத்தில் தொன்றுதொட்டு வழக்கில் இருந்துவரும் வசந்தன ; கூத்து:

ஒரு நோக்கு. ஈழத்துப் பூராடனார், அன்புமணி இரா.நாகலிங்கம், க. தங்கேஸ்வரி, மு.நடேசானந்தம் (தொகுப்பாசிரியர்கள்). கனடா: ஜீவா பதிப்பகம், 1109 Bay Street, Toronto, Ontario M5S 2B3, 1வது பதிப்பு, ஏப்ரல் 2000. (கனடா: