16362 கலையிலிருந்து வாண்மை வடிவமாக இசைக் கலை : இலங்கைத் தமிழ்ப் பண்பாட்டினடியான பார்வை.

சுகன்யா அரவிந்தன். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2022. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street). 

xii, 124 பக்கம், விலை: ரூபா 760., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-685-168-7.

இலங்கைத் தமிழ்ப் பண்பாட்டில் இசைக்கலை மரபுக் கூறுகள், இலங்கைக் கல்விப் புலத்தில் இசை: அறிமுகம், கி.பி. 19ஆம் நூற்றாண்டின் முற்பரப்பின் இலங்கைத் தமிழ்ச் சமூகமும் இசைக் கலையும், கர்நாடக இசை மேம்பாட்டுக்கு இலங்கை ஊடகத்துறை ஆற்றிய தொண்டு, இலங்கைத் தமிழ்ப் பண்பாட்டுப் பரம்பலில் இசை, நிறுவனப்படுத்தப்பட்ட கர்நாடக இசைக் கலை மரபும் வளர்ச்சியும், பாடசாலைப் பாரம்பரியமும் இசைக் கலை மரபுப் பரம்பலும், இலங்கை உயர் கல்விப் புலத்திலே கர்நாடக இசைக்கலை மரபு, ஆசிரியத்துவத்துக்கான இசைக் கல்வி, இசைக் கலைக்கான அரசின் அங்கீகாரமும் ஆதரவும், இலங்கை இந்திய கலையுறவுப் பாலம்- மீள்சுற்று ஆகிய 11 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இசைத் துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றுகின்ற கலாநிதி சுகன்யா அரவிந்தன், சமூகவியல், கர்நாடக இசை ஆகிய இரு துறைகளிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பட்டத்தைப் பெற்றவர். கர்நாடக இசையில் முனைவர் பட்டத்தை சென்னைப் பல்கலைக்கழகத்திலும், பரத நாட்டியத்துக்கான முது தத்துவமாணிக் கற்கைநெறியினை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் பூர்த்திசெய்தவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70226).

ஏனைய பதிவுகள்

alles via Keno OCS de

Content Unser Plan bei Erreichbar Keno, wenn um echtes Geld vorgetäuscht sei Letzter tag des jahres Millionen – Maximale Gewinnchancen – ACHTUNG: erweiterte Soll Übe