16492 எழுதிக் கடக்கின்ற தூரம்.

ரூபன் சிவராஜா. சென்னை 600 078: டிஸ்கவரி புக் பலஸ், இல. 6, மஹாவீர் கொம்ப்ளெக்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர், 1வது பதிப்பு, மார்ச் 2021. (சென்னை 600 078: டிஸ்கவரி புக் பலஸ், இல. 6, மஹாவீர் கொம்ப்ளெக்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர்).

176 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-89857-63-4.

இது எனது முதலாவது கவிதைத் தொகுப்பு. உள்ளத்தில் இருந்து சில வார்த்தைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன். அக உணர்வுகளின் உந்துதலிலிருந்தும் சமூகச் சூழல்களின் தாக்கத்திலிருந்தும் வெவ்வேறு தருணங்களில் கருக்கொண்டவையே இத்தொகுப்பிலுள்ள கவிதைகள். கவிதை தோன்றுகின்ற அக மற்றும் புறத் தூண்டுதல்கள் எல்லா நேரமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை அவை அந்தந்தத் தருணங்களின் மனநிலைகளுக்கேற்ப மாறுபடக்கூடியவை. இதைத்தான் எழுதவேண்டும் என்று திட்டமிட்டு இக்கவிதைகள் எழுதப்படவில்லை. அப்படி எழுதும் கவிதைகள் உயிர்ப்புடையனவாக வந்துவிடுவதுமில்லை. மனநிலை, மனிதர்கள், அனுபவங்கள், சம்பவங்கள், தாக்கங்கள். சமூகம், அரசியல், இயற்கை, ஆழ்மனதைத் துழாவும் நினைவுகள், அலைக்கழிக்கின்றதும் உந்துதலுமான கனவுகள், காலம், தூரம் கவிதைகளின் பேசுபொருளைத் தீர்மானித்திருக்கின்றன” (ஆசிரியர் என்னுரையில்).

ஏனைய பதிவுகள்

Fishing Legislation

Blogs Simply how much perform Fl lobster angling charters cost? Bait Needed The new amazingly urchins that will be taken from fishing in the waterfall