வி.மைக்கல் கொலின். மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2021. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496A, திருமலை வீதி).
viii, 32 பக்கம், புகைப்படங்கள்;, விலை: ரூபா 300., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-624-5849-09-3.
காதலும் அரசியலும் கலந்ததுதான் மனித வாழ்க்கை என்பதில் அசையாத நம்பிக்கை கொண்ட மைக்கல் கொலினின் நான்காவது கவிதை நூல் இது. ஆறு வருடங்கள் காதலியாயும், 22 வருடங்கள் காதல் மனைவியாயும் வாழும் தன் வாழ்க்கைத் துணைவியை இக்கவிதைகளுக்குள் இலக்கியமாக வாழவைத்திருக்கிறார். தலைப்பற்ற புதுக் கவிதைகளின் தொகுப்பாக காதல் மனைவியின் அழகிய படங்களை அங்காங்கே சேர்த்து தன் கவிதைகளுக்குக் கோலம் போட்டிருக்கிறார். வாழ்வின் பக்கங்களில் காதலின் பயணம் எப்போதும் நம்மோடு கைகோர்த்துக் கொண்டிருக்கும். அதை எழுதித் தீராப் பிரியங்களாக இலக்கியமாக்கியிருக்கிறார். ஆசிரியரின் 22 வருட திருமண வாழ்வின் நினைவாக வெளிவரும் இந்நூல் 42ஆவது மகுடம் பிரசுரமாக வெளிவந்துள்ளது.