வாசுதேவன். மட்டக்களப்பு: வாசுதேவன், 1வது பதிப்பு நவம்பர் 2021. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி).
xvi, (4), 96 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 20.5×13 சமீ., ISBN: 978-624-5739-02-8
“முற்றிலும் புதிய பேசுபொருள்சார் 90 கவிதைகள் இக்கவிஞரால் தரப்பட்டுள்ளன என்பது வற்புறுத்தப்பட வேண்டியதொன்றாகின்றது. இயற்கை சார்ந்த மரம், புல், பூ, மழை, காற்று, நிலவு, மின்னல் முதலியன தரும் வெவ்வேறான புதிதான அனுபவ வெளிப்பாட்டுக் கவிதைகளையே கருதுகிறேன். பிறிதொரு மிக முக்கியமான சிறப்பியல்பு இன்றைய ஈழத்துக் கவிஞர்கள் பலரும் ஈடுபாடு காட்டாத பேசுபொருள் சார்ந்தது. வாழ்வியல் தரிசன வெளிப்பாடுகள் பற்றியது அது. இத்தியாதி கவிதைகள் இத்தொகுப்பில் ஆங்காங்கே பல காணப்படுவது விதந்துரைக்கத் தக்கது. தவிர, ஆச்சரியமும் அதிர்ச்சியும் கொண்ட கேள்விகளை எழுப்பும் கவிதைகள் சிலவும் இத்தொகுப்பில் உள்ளன. சுருங்கக் கூறின், பொருள் புதிது, சொல் புதிது, படிமம் புதிது, சுவை புதிது ஆன கவிதைகள் கொண்ட இத்தொகுப்பு நிச்சயம் “புழுதி ரசம்” அன்று நாட்டு வைத்தியம் கூறும் முறையில் வைக்கப்பட்ட குணமும் மணமும் மிக்க ரசமேயாகும்.”(பேராசிரியர் செ.யோகராசா, பின்னட்டை வாசகங்கள்).