16499 எனக்கென்றிருந்த இடங்களில் (கவிதைத் தொகுதி).

துரைச்செல்வி. சென்னை 600 024: காவ்யா, 14, முதல் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், 1வது பதிப்பு, டிசம்பர் 2003. (சென்னை 600 005: மணி ஆப்செட்).

xiv, 98 பக்கம், விலை: இந்திய ரூபா 50., அளவு: 21.5×14 சமீ.

துரைச்செல்வி, இலங்கை தந்த இன்னொரு தமிழ்க் கவி. சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலையும், ஆய்வு நிறைஞர் பட்டமும் பெற்றவர். தாயகத்தில் தான் இழந்த மண்ணை நாளும் தேடும் கண்ணீர்த் துளிகள் இவருடையவை. தற்போது லண்டனில் பணிபுரிகிறார். இது இவரது முதலாவது கவிதைத் தொகுதி. தடுக்காதே, நீ வராத நாளை, கலையாத நினைவுகள், மழை, சந்தர்ப்பம் தேடி, காத்திருக்கின்றேன், மழையின் நாட்குறிப்பு, உறங்காத உனக்கு, எனக்கென்று எதுவும், ஏன், உங்களிடம், வெற்றுக்கோடுகள், ஐ ரியலி மிஸ் யூ, கனவு சிதைந்த இமையில், கல்லறையில் பூங்காவனம், நல்லூர்க் கந்தா, நெருப்பின் கிளையில் நான் எனத் தொடரும் துரைச்செல்வியின் 43 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

16718 சுடுமணல்.

கே.சுனில் சாந்த (சிங்கள மூலம்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). பஸ்ஸரை:கே.சுனில் சாந்த, நதாஷா, டீ.எஸ்.சேனநாயக்க மாவத்தை, 1வது பதிப்பு, 2012. (நுகேகொட: நியோ கிராபிக்ஸ், 143, ஸ்டேஷன் ரோட், கங்கொடவில). xx, 85 பக்கம்,