வே.புவிராஜ். யாழ்ப்பாணம்: கலை, இலக்கிய பண்பாட்டுப் பேரவை, கைதடி மேற்கு, கைதடி, 1வது பதிப்பு, 2022. (சென்னை 600117: ஸ்ரீ துர்க்கா பிறின்டர்ஸ்).
248 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.
“ஏர் என்னும் என் கவிதைத் தொகுப்பு அறிவியல் சொல்லவில்லை, அறிவுரை சொல்லவில்லை, புதுவித புத்துணர்வு என்னும் புரட்சிகள் மூட்டவில்லை, வலிகளை சார்ந்து நிற்கும் எளியவர் எம் கனவின் நெருடலின் ஓரிரு துளிகளின் வலிகள் வரிகளாக பதிவாகி நிற்கும் ‘ஏர்” ஓரிரு பேர்களது மனங்களை உழுது புரட்டும் என்ற நம்பிக்கையே என் எழுத்தால் எனக்கு நான் சூடிக்கொள்ளும் மகுடம். புரட்டுவதும் புறந்தள்ளுவதும் உங்கள் விருப்பம். விளம்பரம் இல்லாமல் விற்றுத் தீர்க்கும் துளசி நீர்த் தீர்த்தம் மருந்தென இட்டாலும், மடையெனத் திறந்தாலும் மனதுக்குள் இனிக்கும் என் கவிதைகள் ஒவ்வொன்றும் உங்கள் நினைவுகளை மீட்டுவரும் என்பது உறுதி” (ஆசிரியர் உரை).