சிவசேகரன் (இயற்பெயர்: சிவலிங்கம் சிவசேகரன்). மருதங்கேணி: சிவலிங்கம் சிவசேகரன், உயிலடி, குடத்தனை வடக்கு, குடத்தனை, 1வது பதிப்பு, மார்கழி 2021. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி).
72 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-624-98868-0-3.
“சிவசேகரன் அண்மைக் காலத்தில் புதுக்கவிதை-நவீன கவிதைகளை யாத்து வருபவர்களில் கவனத்தை ஈர்த்து வருபவர். அதன் அடையாளமாக கொடகே விருதையும் வென்றவர். அதிகம் பேர் தொடாத மரபின் வழிவந்த குறும்பா, இவருக்கும் கைவந்திருக்கிறது என்பது இளையவர்களையும் தன்பால் ஈர்ப்பது தமிழ் மரபின் சிறப்பு என்பதை புலனாக்குகின்றது. குறும்பாவிற்கு இருக்கவேண்டிய ஓசை ஒழுங்கு, எதுகை, இயைபுத் தொடை, எனும் இலட்சணங்களை இவற்றில் காணமுடிவது ஆரோக்கியமான நிறைவு. ஈழத்தில் குறும்பா முயற்சிகள் போதவில்லை எனும் கருத்தியலை அண்மைய குறும்பா முயற்சிகளும் இப்போது வெளிவரும் இவரது இக்குறும்பா வெளியீடும் குறைக்கும் என்பது திண்ணம்”. (கவிஞர் வ.வடிவழகையன், அறிமுக உரையில்).