16502 ஒரு திராட்சைக் கொடி தேம்பி அழுகிறது.

ஏ.எம்.எம்.அலி. திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2016. (திருக்கோணமலை: A.R.T. பிரின்ரர்ஸ், 82, T.G. சம்பந்தர் வீதி). 

xvii, 104 பக்கம், விலை: ரூபா 375., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-4628-36-6.

கவிஞர் கிண்ணியா ஏ.எம்.எம். அலியின் தேர்ந்த கவிதைகளின் தொகுப்பு இது. இக்கவிதைத் தொகுதியில் இவரது மரபுக் கவிதைகளும், அவ்வப்போது எழுதிய புதுக் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. கண்ணி சிந்து, வெண்பா, அகவல், அறுசீர் மற்றும் எண்சீர் என்று மரபுசார்ந்த கவிதைகளாக இத்தொகுப்பின் பல கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் அலியின் சொந்த அனுபவங்களும், வாழ்வின் மறுத்துரைக்க முடியாத எதார்த்தங்களும் மௌனமொழியில்; பேசிக்கொண்டிருக்கின்றன. தினபதி குழுமத்தின் சிந்தாமணி வார இதழின் ஆஸ்தான கவிஞர்களுள் ஒருவராக வலம்வந்தவர் அலி.  1974களில் ஆக்க இலக்கியத்துறையில் எழுதத் தொடங்கிய இவரது முதலாவது மரபுக் கவிதைத் தொகுதி “குடையும் அடைமழையும்” 2005இலேயே வெளிவந்திருந்தது. இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி “ஒரு தென்னைமரம்“ 2011இல் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Razor Shark Schätzung

Content Pharaos Riches Hack Slot Free Spins | Lukrative Provision Features Beim Durchlauf Über Unserem Hai Entsprechend Funktioniert Ein Razor Shark Online Was Ist Nachfolgende