16503 ஒரு துண்டு வானம் நிறைய நிலா : வடிவழகையன் கவிதைகள்.

வ.வடிவழகையன். யாழ்ப்பாணம்: சுகர்யா வெளியீடு, அளவெட்டி, இணை வெளியீடு, சுவிட்சர்லாந்து: திரு.திருமதி சிவபாலன்-தேவகுமாரி இணையர், 1வது பதிப்பு, தை 2022. (யாழ்ப்பாணம்: ஜே.ஆர். இன்டஸ்ட்ரீஸ், இல. 7, உடுவில் மகளிர் கல்லூரி மேற்குத் தெரு, உடுவில்).

xii, 117 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 23.5×16.5 சமீ., ISBN: 978-624-98799-0-4.

வடிவழகையன் கவிதைகளின் இண்டாவது தொகுப்பு இது. ‘பாடுங்கள் கவிஞர்காள்” என்ற கவிதை தொடங்கி ‘நம்பிக்கை வளரட்டும்” என்ற கவிதை ஈறாக சந்தம் ததும்ப கருத்தாழம் மிக்க 102 கவிதைகளை அழகு தமிழில் எள்ளல் கொஞ்சத் தரும் பாங்கு அவரது தனித்துவமாகின்றது. ஏற்கெனவே கவிஞர் வடிவழகையனின் ‘முகில் எனக்கு துகிலாகும்” என்ற கவிதை நூல் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தினரால் வெளியிடப்பட்டிருந்தது என்பதுவும் அந்நூல் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றிருந்தது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

ஏனைய பதிவுகள்

15539 சிவப்பு இரவுகள்.

காத்தான்குடி றஹீம் (இயற்பெயர்: எச்.எம்.எம்.றஹீம்). திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (மட்டக்களப்பு: எவகிறீன் அச்சகம், 185A, திருமலை வீதி).  (7), 8-69 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: