16504 ஒரு நானும் இன்னும் ஒரு நானும்.

வெலிமடை ரபீக். கொழும்பு 10: வெள்ளாப்பு வெளி, ஏ 6, 2/1 என்.எச்.எஸ்., கலைமகள் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2020. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xvii, 82 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 22×15 சமீ ISBN: 978-955-0280-14-8.

வெள்ளாப்பு வெளியின் ஒன்பதாவது நூலாகவும், வெலிமடை ரபீக்கின் மூன்றாவது கவிதை நூலாகவும்  வெளிவந்துள்ளது. எண்பதுகளிலிருந்து ஈழத்துக் கவிதைத் துறையில் அறியப்பட்டவரான வெலிமடை ரபீக்கின் கவிதைகள் ரமழானே, என் மரண வாக்குமூலம், கொறோனா, நாளை விடியும், கொல்லுகின்ற சேதிகள், மிலேச்சம், இனவாதியம், கோடை, ஆச்சி, கைவிலங்குலகம், ஊரடங்கு, மஜ்னுவின் புலம்பல், வெப்பப் பிரார்த்தனைகள், கயிரறுதல், பொம்மைகள், நிகழ்காலம், இன ஒற்றுமை, சுயநலமிகள், ஞானோதயம், நான் நானே தான், பொய், கறுப்பு மே, பொய் முடிச்சுகள், தொப்பி கதை, அவசர காலம், நிறங்கள், கோணல் பார்வைகள், நம்பிக்கை, தொடர் கதைகள், வலி, இட்லர் வார்த்தைகள், கற்காயங்கள், புலம்பல்கள் ஆகிய தலைப்புகளில் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. புணர்ச்சியற்றதும்,  இறுக்கமற்றதும், சிறியதுமான தனிச் சொற்கள் இவருக்கேயான தனித்துவமான கவிதை மொழியைப் பயன்படுத்துவதனால், இவரது கவிதைகள் வாசகரினால் எளிதில் உள்வாங்கப்படுகின்றன.

ஏனைய பதிவுகள்

Myspace Free Slots

Content How do i Score Totally free Revolves? Totally free Ports Words You should know Here are the brand new game open to have fun