16506 ஒரு மருத்துவரின் மருத்துவமனை நாள்கள்.

இரா.முரளீஸ்வரன். மட்டக்களப்பு: இரா.முரளீஸ்வரன், எண் 47, நல்லையா வீதி, 1வது பதிப்பு, 2020. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xxii, 82 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 22×15 சமீ., ISBN: 978-624-966-290-2.

டாக்டர் முரளீஸ்வரன், கல்முனை அரசு மருத்துவமனையின் இயக்குநராக உள்ளார். அவரது கவிதைத் தொகுதி மருத்துவர்களின் உணர்வுகளின் வெளிப்பாட்டை அனுபவம் மிக்க கூர்மையான பார்வையினூடாக பதிவுசெய்கின்றது. அவை மனிதம் பேசுகின்றன. வருத்தம் தெரிவிக்கின்றன. ஆறுதல் அளிக்கின்றன. உளவியல் பார்வையை வீசுகின்றன. இத்தொகுதி சுண்டு என்கின்ற சிறுவன்,  இறப்பு உறுதியான மருத்துவமனைக் கணங்களில், மரண வீடுகளில் கொல்லப்படும் மருத்துவமனைகள், கூடுவிட்டுக் கூடுபாய்தல், அந்த அறையை எட்டிப் பார்க்காதே, வார்த்தைகளும் நேரங்களும் போதாமல், மீள்பிறப்பின் ஆனந்தம், அம்புலன்ஸ் வண்டிகளும் சில தாமதங்களும், அன்பும் சூழ்ந்தது உலகு, வாழ்க்கையை படித்து, மரணங்கள் பழகிய மருத்துவம், அவசரமாய்ப் பயணம் போனவனின் தந்தை, பார்வையாளர் நேரங்கள், சத்திர சிகிச்சைத் தழும்பு, விடுதி நாள்கள் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, மரண அறிவித்தலில் வந்தவர்கள், ஸ்டெதஸ்கோப், ஓர் அதிகாலை மரணம் சொன்ன பாடம், உள்ளகப் பயிற்சிக் காலம், கட்டில் எண் 11, ஒரு நோயுற்றவரின் கடிதம், மந்திரக்கோல் தேடும் மருத்துவம், மருத்துவரின் தொலைபேசி அழைப்புகள், கடவுளாய் மாறுதல், நோயுற்ற செய்தி, காத்திருப்போர் கதைகள், நோயும் நோய்சார்ந்த இடமும், இறுதி ஆறு மாதங்கள், மருத்துவமனை யுத்தங்கள், யாரோடும் பகை கொள்ளாது, புதிதாய்ப் பிறந்த குழந்தை, குண்டுகள் பூத்த காலம், கடல்-நிலா-மலர்-கல்லறைத் தோட்டம், இங்கே தீ எரிகிறது, வெள்ளம் வேண்டாம் துளிகள் போதும், ஒரு நுண்ணுயிரின் திக்விஜயம் ஆகிய 36 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Online Ports

Content Splash Intogold Seafood Ports! What are the Finest Free online Slots? Are there 100 percent free Ports Game To have Android os Devices? Remember,