16509 கடையில் பூத்த கவிதைகள்.

ஆதம்பாவா அஸீஸ். சம்மாந்துறை: தேசிய கலை இலக்கிய தேனகம், 47 B, அமீர் அலி வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2016. (சாய்ந்தமருது: எக்செலன்ட் பிரின்ட்).

(4), 5-172 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-43028-0-8.

‘சம்மாந்துறை அஸீஸ் காக்கா” என்று பரவலாக அறியப்பட்டவர் கவிஞர் அஸீஸ். இவர் சிறுவயதிலிருந்தே கவிதை புனைவதிலும் நகைச்சுவையாகக் கதைகள் புனைவதிலும் சக கிராமத்தவரிடையே பிரபல்யமாகியிருந்தவர். தனது இளமைக்காலத்திலேயே இலங்கை வானொலியில் தனது கவிதைகளை ஒலிபரப்பவைத்தவர். சிறந்த கலைஞராகவும் சில்லறை வியாபாரியாகவும் வலம்வந்தவர். தான் சார்ந்த சமூகத்தில் காணப்பட்ட குறை நிறைகளை வைத்து இவர் அவ்வப்போது தனது கடையில் வைத்து எழுதிய கவிதைகளின் தொகுப்பாக ‘கடையில் பூத்த கவிதைகள்” என்ற சுவையான இக்கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்