16522 காற்றின் மொழி: கவிதைகள்.

பொலிகையூர்க் கோகிலா. பிரான்ஸ்: தமிழ் நெஞ்சம், 59, rue des Entrechats, 95800 Cergy ,1வது பதிப்பு, நொவெம்பர் 2021. (அச்சக விபரம் தரப்படவில்லை).

128 பக்கம், விலை: இந்திய ரூபா 120., அளவு: 21.5×14 சமீ.

”காற்றின் மொழியாகி உங்கள் கைகளில் தவழும் இத்தொகுப்பு எனது முதலாவது கவிதைத் தொகுப்பாகும். என் உணர்வை மொழிபெயர்த்துப் பாடிய இக்கவிதைகள், எழுத்துகளின் வரிவடிவம் மூலம் பல உணர்வு மொழிகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் என்பது என் மன நம்பிக்கையாகும். இந்த இருபது வருட காலத்தில் எழுதிச் சேர்த்து வைத்த கவிதைகளான இவை, காதல் மொழி, கருணை மொழி, நம்பிக்கை மொழி, புரட்சி மொழி, பெண்ணிய மொழி என எல்லா மொழிகளையும் உங்கள் கைகளில் கொண்டுவந்திருக்கின்றன. வாசிக்கும்போதே என் ஆரம்பகாலக் கவிக் குழந்தைகளின் தள்ளாட்டத்தையும், அண்மைக்காலத்து கவிக் குமரிகளின் அழகையும் உங்களால் உணர முடியும்” (ஆசிரியர்).

ஏனைய பதிவுகள்

13571 அழகு முல்லை.

திமிலைத் துமிலன் (இயற்பெயர்: சின்னையா கிருஷ்ணபிள்ளை). மட்டக்களப்பு: கவிமணி வெளியீட்டுக் குழு, முத்தமிழ் மன்றம், ஆசிரியர் கலாசாலை, 1வது பதிப்பு, மாசி 1986. (மட்டக்களப்பு: கத்தோலிக்க அச்சகம்). (12), 88 பக்கம், விலை: ரூபா