பா.சிவபாலன். யாழ்ப்பாணம்: பா.சிவபாலன், 214/4 C, இராமநாதன் வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (திருக்கோணமலை: ரெயின்போ மினிலாப், 361, நீதிமன்ற வீதி).
140 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 18.5×13.5 சமீ., ISBN: 955-98590-2-1.
திருக்குறளை எளிமைப்படுத்தி இலகுவான கவிதைகளாக்கித் தரும் முயற்சியில் கவிஞர் சிவபாலன் ஈடுபட்டுள்ளார். இக்கால வாசகர்களை மனங்கொண்டு அவர்களின் உளவியலை உணர்ந்து இக்கவிதைகளை எழுதியிருக்கிறார். கல்வித் திணைக்களத்தில் பணியாற்றும் ஆசிரியர் கல்வியுலகை நன்கு அறிந்தவர் என்பதை அவரது படைப்புக்கள் மூலம் பூடகமாகக் காணமுடிகின்றது. திருக்குறளைப் பயிலுபவர்களுக்கு இக்கவிதைகள் ஒவ்வொன்றையும் படிக்கும்போது அக்கவிதைக்குரிய அதிகாரத்துள் அடக்கப்பட்டுள்ள பத்துக் குறள்களில் மூன்று நான்கு குறள்களாவது நினைவில் எழும் வகையில் இக்கவிதைகள் எழுதப்பட்டுள்ளன.