மேரா. மட்டக்களப்பு: பட்டிப்பளைப் பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியம், 1வது பதிப்பு, தை 2020. (மட்டக்களப்பு: காந்தள் அச்சகம், புதுக்குடியிருப்பு).
100 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-96103-2-3.
இது மேராவின் நான்காவது கவிதைத் தொகுப்பு. சமகால அரசியல்சார்ந்த விடயங்கள் பெரும்பாலும் குறியீட்டுப் பாங்கில் பன்முகப் பரிமாணங்களோடு இக்கவிதைகளில் வெளிப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. இத்தொகுப்பில் படுவான்கரை மக்கள் அனுபவிக்கும் சமூகப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசப்படுவதும் கவனிக்கத்தக்கது. இத்தொகுப்பில் ஏறத்தாழ முப்பதாண்டுக் காலம் நடைபெற்று முடிந்த போரின் விளைவுகள் பொதுவாகப் பேசப்படுகின்றன. இந்நூலாசிரியர், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைமாணி (சிறப்பு), முது தத்துவமாணிப் பட்டங்களை நிறைவுசெய்து, அங்கு கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வினை தமிழ் இலக்கியத்துறையில் மேற்கொண்டு வருகிறார். மட்டக்களப்பு மாவட்டத்தின் வளம்மிக்க படுவான்கரைப் பிரதேசத்தலுள்ள அரசடித் தீவுக் கிராமத்தில் பிறந்து தற்போது கல்லடியில் வசித்து வருபவர். பட்டிப்பளைப் பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.