கொழும்பு 14: புரவலர் புத்தகப் பூங்கா, இல.25, அவ்வல் சாவியா வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2020. (அச்சக விபரம் தரப்படவில்லை).
96 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22×15.5 சமீ., ISBN: 978-955-3914-019-9.
மாத்தளை, இறத்தோட்டையைச் சேர்ந்தவர் செல்லையா சந்திரசேகரன். 2015 ஆம் ஆண்டு மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில் சாகித்திய விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட இவர் 2019 இலும் இந்து சமய கலாசாரத் திணைக்களத்தினால் கலைச்சுடர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தொகுப்பில் இவர் எழுதிய தண்ணீரும் கண்ணீரும், விந்தையான வேடிக்கைக் கூட்டம், புதிய படைகள், கூட்டொப்பந்தம் கூட வருமா?, தேசமே ஒரு தடவை, நினைவிலிருக்கட்டும், நியாயம் தேடும் மனசு, சுய தணிக்கை, வியர்வை ஒவியம், புதிய சிறகுகள், சிந்தித்துப் பார், வரலாறு வாழ்த்தும், ஏன், மகளிர் தினம், பந்திக்கு வர மறுக்கும் பரிமாறல் (படையல்), எழுத்து தாகம், தாயின் தாற்பரியம், குருவின் பார்வை, ஓர் இரவு துயில் கொண்டால், சரித்திரத்தில் சாகித்திய விழா, அடிபட்டுப் போகும் அவலங்கள், வார்த்தை தேடும் வாழ்த்துக்கள், விடிவும் விடியலும், தொண்டுக்காய் தொடர்ந்து, விடுதலை எப்போ?, வரலாறு வாழ்த்தும், சுதந்திரப் பொன் விழா, ஆலமரமும் நீயும், இனியொரு பித்தன், இப்படிக்கு குப்பைமேடு ஆகிய கவிதைகள் இடம்பெற்றுள்ளன.