திருச்செல்வி புவனேஸ்வரன். மன்னார்: மாந்தை கிழக்கு-பிரதேச செயலகம், மாந்தை கிழக்கு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2016. (யாழ்ப்பாணம்: மெகா பதிப்பகம், கச்சேரியடி).
vi, 60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
இக்கவிதைத் தொகுப்பில் ஈழத்தமிழரின் வீரம்செறிந்த வரலாற்றுப்பக்கங்களைத் தன்னுள் புதைத்து வைத்துள்ள வன்னிப் பெருநிலப்பகுதியில், பாண்டியன்குளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட திருச்செல்வியின் 59 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. காதல், நட்பு என்பவற்றை மாத்திரமல்லாது தன் சமூகம், தேசம் சார்ந்த பல செய்திகளையும் பாடுபொருட்களாகக் கொண்டு உணர்வும் கருத்துச் செறிவும் கொண்ட கவிதைகளை படைத்திருக்கிறார்.