16530 சிவசேகரம் கவிதைகள் 1973-2020.

சி.சிவசேகரம். ஐக்கிய இராச்சியம்: சமூகம் இயல் பதிப்பகம், 317, பெருந் தெரு வடக்கு, ஈஸ்ட்ஹாம், லண்டன், 1வது பதிப்பு, பெப்ரவரி 2022. (சென்னை 600017: மணி ஓப்செட்).

xxxii, 488 பக்கம், விலை: ரூபா 1500., அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-93-94189-00-3.

1942இல் திருக்கோணமலையில் பிறந்தவர் கவிஞர் சி.சிவசேகரம். பாடசாலைக் காலத்திலேயே இலக்கிய, அரசியல் துறைகளில் ஆர்வம் காட்டத் தொடங்கிய இவர் தமிழ்த் தேசிய அரசியற் பின்புலத்தைக் கொண்டவர். இடதுசாரிக் கருத்துநிலையை அடித்தளமாகக் கொண்டு அரைநூற்றாண்டுக்கும் மேலாக எழுத்து, சிந்தனை, செயற்பாட்டுத் தளங்களில் தொடர்ச்சியாகப் பங்களித்து வருகிறார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இயந்திரப் பொறியியல் துறைத் தலைவராக 2000 முதல் 2005 வரை பணியாற்றியவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராக 2015 முதல் 2019வரை பணியாற்றியவர். 1973இல் வெளிவந்த இவரது “மலைப் பாதை” என்ற கவிதை தொடங்கி, 2020இல் எழுதிய “ஊரடங்கு” என்ற கவிதை ஈறாக 272 கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இறுதிப் பகுதியில் நதிக்கரை மூங்கில், செப்பனிட்ட படிமங்கள், தேவி எழுந்தாள், ஏகலைவ பூமி, போரின் முகங்கள், வடலி, இன்னொன்றைப் பற்றி, கல்லெறி தூரம், முட்கம்பித் தீவு, ஆச்சியின் கொண்டையூசிகள் ஆகிய இவரது நூல்களுக்கு எழுதப்பட்ட முன்னுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 68828).

ஏனைய பதிவுகள்

Utwórz Nowoczesną Stronę Po Iis 5

Content Sprawdź tych gości – Najistotniejsze Przeraźliwe Strony internetowe, Ażeby Przestraszyć Znajomych Dołącz Witrynę Do odwiedzenia Microsoft Edge Gdy Zamontować Google Search Console? Oszczep Website