கீர்த்தி (இயற்பெயர்: கீர்த்தனா தமிழ்மாறன்). யாழ்ப்பாணம்: கீர்த்தனா தமிழ்மாறன், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (யாழ்ப்பாணம்: சாய்ராம் பிரின்டர்ஸ், பிரதான வீதி, சங்கானை).
iv, 81 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-624-95253-0-3.
ஆசிரியரின் முதலாவது நூலாக இக்கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. “ஒரு புத்தகத்தின் பிரவேசம் என்பது ஒரு பிரசவத்திற்கு சமம் என்பார்கள். என் முதல் புத்தகப் பிரசவம் ‘சிறகு முளைத்து எழு”. இந்நூல் என் கவிப் பயணத்தின் முதல் முயற்சி. கவி மீது நான் கொண்ட ஆர்வமும் கவிக் காதலும் சமூகம் மீது நான் கொண்ட பார்வையும் என்னை ஒரு சமூகவியல் கவிநூலை வெளியிடத் தூண்டியது.” (ஆசிரியர், என்னுரையில்).