16532 சுட்ட பொன் : கவிதைத் தொகுப்பு.

வாகரைவாணன் (இயற்பெயர்: ச.அரியரெத்தினம்). மட்டக்களப்பு: ச.அரியரெத்தினம், வாகரை, 1வது பதிப்பு, நவம்பர் 1971. (சென்னை 7: எக்செல் அச்சகம்).

(18), 46 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 18×12 சமீ.

யாழ்ப்பாணம், புனித பத்திரிசியார் கல்லூரியின் ஓய்வுபெற்ற ஆசிரியரான வாகரைவாணனின் இளவயதில் அவரது கல்வித் திறமை காரணமாக முன்னாள் ஆயர் அமரர் இக்னேஷியஸ் கிளெனி யே.ச.ஆண்டகை அவர்களால்; சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாக தமிழ்மொழியைத் துறைபோகக் கற்று வித்துவான் பட்டத்தை பெற்றக்கொண்டு நாடு திரும்பினார். அதன் நன்றிக்கடனாகவும், தவத்திரு இக்னேஷியஸ் கிளெனி ஆண்டகையின் இருபத்தைந்தாவது மேற்றிராணித்துவ நிறைவுவிழாவை முன்னிட்டும், ஆயர் அவர்களைப் பற்றிய இக்கவிதைத் தொகுப்பு வாகரைவாணனின் முதலாவது நூலாக வெளியிடப்பட்டுள்ளது. வேண்டுதல், வழங்குக வாழ்வே, பாராட்டுப் பலிக்கும், துறவி, காதலி, சேவகன், தாய், சான்றோன், தலைவன், நண்பன், நல்லாயன் ஆகிய தலைப்புகளில் இக் கவிமாலை புனையப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் P 2718).

ஏனைய பதிவுகள்

ᐈ Free Ports On the web

Content Best Online slots games Gambling enterprises 2024 – Pharaohs Treasure slot free spins Enjoy Gladiator: Road to Rome Position Games For real Money Talk