சரவணையூர் சுகந்தன் (தொகுப்பாசிரியர்). வேலணை: தமிழமுது வெளியீடு, சரவணை, 1வது பதிப்பு, 1975. (வேலணை: தாரணி அச்சகம், சுருவில் வீதி, சரவணை).
24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
புதுக்கவிதை ஈழத்தில் அறிமுகமான காலகட்டத்தில் அவை பெரும்பாலும் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலுமே அரங்கேறின. அக்காலகட்டத்தில் மரபுக் கவிஞர்களிடையே புதுக்கவிதை பற்றிய மாறுபட்ட கருத்துகள் ஊடாட்டம் கண்டிருந்தன. இச்சந்தர்ப்பத்தில் சரவணையூர் சுகந்தன் அவர்கள் அன்றைய காலகட்டத்தில் எழுதப்பட்ட பல்வேறு புதுக்கவிதைகளையும் தொகுத்து புதுக்கவிதை மாண்பினை நிலைநிறுத்தும் வகையில் இந்நூலை வெளியிட்டிருந்தார். இதில் அன்பு ஜவகர்ஷா, அன்புடீன், ஆகசி கந்தசாமி, ஆதவன், இரா.நாகராசன், கல்முனைப் பூபால், கனக பாலதேவி, கோ.லோகநேசன், கோப்பாய் சிவம், சபா சபேசன், சரவணைப்பொய்கை பிரபா, சரவணையூர் சுகந்தன், சேரன், சௌமினி, த.புஷ்பராணி, தாரணி, திருமலை சுந்தா, தேவி பரமலிங்கம், நா.லோகேந்திரலிங்கம், நியாஸ் ஏ.கரீம், நிருத்தன், பாண்டியூர் க.ஐ.யோகராசா, பாலமுனை பாறூக், பூநகரி மரியதாஸ், பொன் பொன்ராசா, மாவை நித்தியானந்தன், மு.பாக்கியநாதன், முல்லை வீரக்குட்டி, ராஜ ஸ்ரீகாந்தன், வ.ஐ.ச. ஜெயபாலன், வதிரி சி.ரவீந்திரன், வன்னி வளவன், வானா வாவன்னா ஆகியோரது புதுக்கவிதைகள் இடம்பிடித்திருக்கின்றன.