16535 சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்.

அப்துல் றஊப் பாத்திமா ஸீபா. மருதமுனை: அலிஸ் ஊடக கலை, இலக்கிய சமூக சேவை வலையமைப்பு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2020. (மருதமுனை: பெஸ்ட் கிராப்பிக்ஸ் டிசைன் அன்ட் கொம்பியூட்டர்ஸ் சேர்விஸஸ்).

xxx, 103 பக்கம், விலை: ரூபா 480., அளவு: 21×15சமீ., ISBN: 978-955-35602-0-9.

“மரியாள் மகி” என்ற புனைபெயரிலும் இலக்கிய உலகில் அறியப்பட்டவர் அப்துல் றஊப் பாத்திமா ஸீபா. சமூகம் சமகால களநிலைமை, காதல், பிரிவு, ஏக்கம் என இன்னோரன்ன விடயங்களைக் கருவாகக்கொண்டு சின்னச் சின்ன பாடுபொருள்களை அமைத்து இங்கு கவிதை படைத்திருக்கிறார். இறக்கை விரிக்கிறது, கற்காலம் போவோம், குறிஞ்சி, கற்சிலைகள், சின்னதாயொரு புன்னகை, தொடரும் சவால்கள், மௌனத்தின் மொழிதலில், கண்ணீர் தேசமிது, அடையாளம், புதிய காலடிகள், பகலில் ஒரு வெண்ணிலா, மின்மினிகளில்லை, அலைகின்ற ஆன்மாக்கள், கந்தலாகிப்போன போர்வை என விரியும் இவரது 57 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்