16536 சூரியனைத் தின்றவர்கள்.

தமயந்தி. நோர்வே: உயிர்மெய் பதிப்பகம், Kaptein Linkesvei 9A, 6006 Aalesund, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2022. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்டர்ஸ், C.E.B. மின்சார நிலைய வீதி).

76 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-624-6047-09-2.

”சாம்பல் பூத்த மேட்டில்” (1985), ”உரத்த இரவுகள்” (1986) ஆகிய இரு தொகுப்புகளின் பின் 36 ஆண்டு கால இடைவெளியில் வெளிவரும் கவிஞர் தமயந்தியின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இதுவாகும். இவரது கவிதைகள் நாடோடி, தனஞ்செயன், கனவான், கௌசல்யன், ஜெயக்கொடி, கொய்யன், விமல் என வெவ்வேறு புனைபெயர்களில் எழுதப்பட்டு தாயக, புகலிட சிற்றிதழ்களில் வெளிவந்துள்ளன. இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் பெரும்பாலும் கடலைப் பற்றியே பேசுகின்றன. Wellcome Drink! , இறுதியாக பேசவிடுங்கள், முண்டஞ்சுறா, அவ்ரோடித், சமாதிகளை சுமப்போர், மவுனத்தோடவள் காத்திருத்தல், அவளும் நானும் ஆனியும் வடகரையும், வண்ணத்துப் பூச்சிகளை வேட்டையாடுதல், ஆண்டவர் உங்களோடு மட்டும் இருப்பாராக, பரிசுத்த ஆவி பசியோடு தப்பிப்போன வழி, காற்று நடமாடும் தெருக்கள், முற்றமில்லாத ஒரு படுக்கையறை, சுடலைக் குருவிகள், திருக்காயங்கள், இடைத்தங்கல் மரம், கோணல் முகங்கள், கைவிடப்பட்ட பாடல், எனது கிராமம், பூச்சிக்குப் பயந்த கவிஞன், மீட்பர்களும் மேய்ப்பர்களும், மீளவேண்டும், இலைகளில் எழுதிய பாடல், இறுதியாக ஒரேயொரு கவிதை ஆகிய 23 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. தமயந்தி எழுத்தாளராக மட்டுமன்றி அசையாப்படக் கலைஞர், கவிஞர், கூத்துக்கலைஞர், கடல்சார்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் எனப் பல்பரிமாணங்களிலும்  அறியப்பட்டவர்.

ஏனைய பதிவுகள்

Finest Online casinos Germany

Blogs You Cannot Withdraw As a result Which Gambling enterprises Take on Pay By Cellular telephone? Shell out Which have Cell phone Borrowing Casino Better