16538 சேனையூர் கலம்பகம்.

பால.சுகுமார். மட்டக்களப்பு: அனாமிகா வெளியீட்டகம், இல. 48, பெய்லி முதலாம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2021. (மட்டக்களப்பு:  வணசிங்க அச்சகம், 496 யு, திருமலை வீதி). 

xxiii, 78 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-955-7326-02-3.

சேனையூர் இந்நூலாசிரியரின் தாய் நிலம். உலகில் நாம் எவ்வளவுதான் வசதிகளோடு வாழ்ந்தாலும் நம் தாய்நிலம் தரும் சுகம் வேறொன்றிலும் இல்லை. சேனையூர் ஈழத் தமிழர்களின் தொல் நிலங்களில் ஒன்று. ஆறோடி வளைந்து அழகுறச் சூழ்ந்த குன்றுகள் தொடர்நிலத்து குளங்களும் குளங்களை அண்டிய வயல்களும், வயல்களைச் சார்ந்து சோலையாய் காடுகளும், அவைகளின் வழி புதைந்து கிடக்கும் வரலாற்றுச் சுவடுகளும் சேனையூரின் தொன்மையையும் வளம் மிக்க வாழ்வையும் நமக்குச் சொல்லும் சாட்சிகளாய் கண் முன் விரிந்து கிடக்கின்றன. மருதமும் முல்லையும் குன்றுகள் சொல்லும் குறிஞ்சியும் ஆற்றிடை நீளும் நெய்தலும், அது கடந்து செல்ல கரச்சை வழியாக செல்கின்ற பாலை நிலத்துப் பரவலும், தமிழ் நிலத்தின் எல்லா முகங்களும் கொண்டவளாய் தன் தாய் பண்டைத் தமிழ் பண்பாட்டின் திருமுகமாய் செந்தமிழ் நிலமாய் சிலிர்த்துக் கிடப்பதை இக்கவியுள்ளம் பாடவிளைந்துள்ளது. அவள் அழகை வரலாற்றை வாழ்வை கலைகளை பண்பாட்டை இங்கு கவிதையாக்கி இருக்கிறார். இந்நூலின் முதற் பகுதியில் எட்டுக் கவிதைகளும், இரண்டாம் பகுதியில் 52 கவிதைகளுமாக 60 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

50 Dragons Slot Review 2024 Free Play Demo

Content Jackpoturi uriașe pe jocurile de casino: simte adrenalina câștigului grămadă! Jocuri care dragon Symbols in 50 Dragons Slots Jocuri pentru două Jocuri aproape aparate

17695 பொன் வண்டு (சிறுகதைத் தொகுப்பு).

ஆதிலட்சுமி சிவகுமார். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆனி 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). vi, 210 பக்கம், விலை: