16539 சொற்காடு : கவிதைகள்.

ப.தியான் (இயற்பெயர்: பழனிவேல் தியாகராசா). திருச்சி 620 003: இனிய நந்தவனம் பதிப்பகம், எண் 17, பாய்க்காரத் தெரு, உறையூர்,  1வது பதிப்பு, ஜீன் 2021. (சென்னை: சாய் தென்றல் பிரிண்டர்ஸ்).

(30), 31-160 பக்கம், விலை: இந்திய ரூபா 150.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-953066-3-3.

தன் எண்ணங்களின் மொழிகளையே இங்கே விதைத்திருப்பதாகக் கூறும் கவிஞர் ப.தியான், சமூக வலைத்தளங்களில் தான் எழுதிப் பகிர்ந்த நாற்பத்தியொரு கவிதைகளை நூலுருவில் தொகுத்துத் தந்திருக்கிறார். இயலாள் தாலாட்டு, மனதின் தின்னா, பொதுப் புலம்பல் ஆகிய மூன்று பிரிவுகளில் இக்கவிதைகள் வகுத்துத் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் தான் பகிர்ந்த கவிதைகளின் வகைப்படுத்தல் பற்றி அவரே குறிப்பிடும் வாசகங்கள் இவை. காலையை அலங்கரித்து விடியல்களை தொகுத்து எங்கள் நடைமுறைகளை நகர்த்தும் இயலின் தொடுகைகளை ”இயலாள் தாலாட்டாய்” தந்திருக்கிறேன். மனங்களின் மகுடியில் ஆடும் எண்ணங்களின் இருப்புகளில் கீறல்களையும் கோரல்களையும் ”மனதின் தின்னா” என்ற சந்தம் புதைத்து விதைத்திருக்கிறேன். காதல் என்ற மருத்துவம் பொய்க்கினும் மெய்க்கினும் காதல் மொழிதல் மனதின் மகுடம். அது ஆளும் அழகு, வலியில் பெருக்கும் நெகிழ்வு, நினைவின் தாலாட்டு அது அழுத்தம் குறைத்து வீரியம் குறைத்து மெலிதாய் தொட்டுச் செல்ல இந்தச் சொற்காட்டுக்குள் தூவியிருக்கின்றேன். மனிதம் புலன்கெட்டுப் புலம்பும் பொழுதுகள் அதிகம். ஆற்றாமை தூக்கி அறியாமை புகுந்து பொறுமை கெட்டு பொறாமை உற்று வாய்மை வரும் சுயமொழி ஆடலை ”பொதுப் புலம்பலாய்” இந்தச் சொற்கட்டுக்குள் அலையவிட்டிருக்கிறேன்.”

ஏனைய பதிவுகள்

Tragaperras Immortal Romance

Content Nachteile Von Immortal Romance Casinos: Pros And Cons Of Immortal Romance 2 Where To Play Immortal Romance Bingo For Real Money: Play Immortal Romance