16541 தீந்தமிழ் வளர்த்த திருமறைக் காவலர்கள் (ஞானக் களஞ்சியம் -2).

க.த.ஞானப்பிரகாசம். யாழ்ப்பாணம்: கத்தோலிக்க கலை இலக்கிய வட்டம், 10/2, மத்தியூஸ் வீதி, 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: ஹரிகணன் பிரின்டர்ஸ், 681, காங்கேசன்துறை வீதி).

vi, 30 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-43475-2-6.

கவிமணி க.த.ஞானப்பிரகாசம் (மறைவு: 16.08.2006) யாழ்ப்பாணம், நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். இவர் நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க பாடசாலையில் அதிபராக பல ஆண்டுகள் சேவையாற்றினார். இவரின் தீந்தமிழ்க் கவிதைகள் தமிழ் மக்களால் என்றும் போற்றப்படத்தக்கன. தமது கவிதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் பல பரிசில்களையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். அவற்றுள் இலங்கையில் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தமையும், இந்தியாவில் பாரதி விருது கிடைத்தமையும் குறிப்பிடத்தக்கன. சுவாமி ஞானப்பிரகாசர், தவத்திரு தனிநாயகம் அடிகள், தாவீது அடிகள் ஆகிய மூன்று தமிழ் அறிஞர்களப் பற்றிப் பாடிய பாடல்களை இந்நூலில் தொகுத்தளித்திருக்கிறார்.

ஏனைய பதிவுகள்

Tangiers Gambling establishment

Posts Is actually Guide Out of Lifeless A reasonable And you can Safe Game To try out? Totally free Revolves Local casino Bonus Canada 2024