16542 துளி அல்லது துகள்: கவிதை.

அலறி (இயற்பெயர்: அப்தல் லத்தீப் முஹம்மட் றிபாஸ்). அக்கரைப்பற்று-2: பேஜஸ் புத்தக இல்லம், 117, பட்டினப்பள்ளி வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2020. (மஹரகம: மில்லெனியம் கிராப்பிக்ஸ், 30/7, 5ஆவது ஒழுங்கை, அம்பகஹபுர).

78 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-99400-4-3.

இக்கவிதைத் தொகுதியின் தலைப்பே இருமைப் பண்புடையதாக உள்ளது. நவீன கவிதைகளுக்கும் இருமைகளுக்குமான தொடர்பு  பலரும் அறிந்ததே. துளி என்பது திரவமாக இருக்கையில் துகழ் என்பது திடத்தின் ஒடுங்கிய உருவாக, துணிக்கையாக இருக்கினறது. ஆனால் துளியின் கூறாக இருப்பதுவும் துணிக்கைகள் அல்லது துகள்களே. இவ்வாறு தனித்தும் ஒன்றித்துமான இருமை நிலைகளில் சடப்பொருள்களின் இருப்பினைப் போன்றதே அலறியின் கவிதைகள். அலறி கிழக்கிலங்கையின் மருதமுனையைச் சேர்ந்தவர். சட்டத்தில் இளமாணிப் பட்டமும், மனித  உரிமைகள், பொதுச் சுகாதாரம், உளவளத்துணை ஆகியவற்றில் டிப்ளோமா பட்டமும் பெற்றுள்ள சட்டத்தரணியாவார். கவிதைக்காக கிழக்கு மாகாண சபையின் விருதினை 2006இல் பெற்றிருந்த இவர் பூமிக்கடியில் வானம் (2005), பறவை போல சிறகடிக்கும் கடல் (2006), எல்லாப் பூக்களும் உதிர்ந்துவிடும் (2008), மழையை மொழிதல் (2009) ஆகிய கவிதைத் தொகுப்புகளை முன்னதாக வெளியிட்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்

25 Euro Bonus Ohne Einzahlung 2024

Content Wie Bekomme Ich Den Nine Casino Bonus Ohne Einzahlung? Tipps Zum Nutzen Des Bonus In Der Schweiz Casinos ohne Anmeldung, auch als Pay N