16543 நாங்கூழ்: கவிதைகள்.

மின்ஹா. சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2020. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்).

66 பக்கம், விலை: இந்திய ரூபா 70.00, அளவு: 21.5×14 சமீ.

“மொழியின் வழமைப் புள்ளியை போன்றதொரு பொருளாய் கவிதை தேங்கி விடுமோவென்கிற ஆதங்கங்கள் மேலோங்கிக் கொண்டிருக்கும் காலத்தின் சோர்வை போக்குகின்றது மின்ஹாவின் இக்கவிதைத் தொகுப்பு. வகைப்படுத்தவியலாத மௌனங்களை மனச்சலனமேற்படுத்தக்கூடிய சிறு பெருக்குகளைக் கொண்டு உந்தித் தள்ளும் நதியின் மொழியை இயல்பாய், புனைவாய் கொண்டிருக்கின்றன. உறவு விலக்கப்பட்ட, தன் உறவிலிருந்த இயற்கையின் படிமங்களை குறியீடுகளாய் நமது விழிப் படலங்களின் காட்சியாக்கி உள்ளுணர்வை வெளிப்படுத்தும் மின்ஹாவிடம் தொன்மப் பெண்களின் பெரும் மூச்சும் பின் நவீன மனவெளியும் சாரையும் நல்லபாம்புமாய் இழைந்து கொண்டிருக்கின்றன.” (நீலகண்டன்-முன்னுரையில்). மாதிரிக்கு ஒரு கவிதை: இருத்தலை ஊதி இடம் நகர்த்தும்/காற்றின் பாதை/மெல்ல நகர்கின்றது. அந்தரமான வாழ்வின் இரேகைகள்/அடங்கிய இரகசியங்கள்/அறிப்படாமலும்/ புரியப்படாமலும்/ தரை மோதியே அழிகின்றன. காற்றை விழுங்கிய/வளிக்குமிழிக்குள்/ எவ்வளவு காற்று/மூச்சுத் திணறியிருக்கும். மிதத்தலின் நீட்சி/அந்தம் வரை/ இறுகப்பற்றி செல்லும் வாழ்வே (மின்ஹா).

ஏனைய பதிவுகள்

Jewish Dating

Content Victoriyaclub Bewertungen: Einzigartige Funktionen Traktandum 10 Das Heißesten Mongolischen Alleinstehender Diese Besten Thai Männerstil sei schon immer ihr großes Motivation bei mir, so gesehen