16544 நாளைய நான்.

சரணிகா இராசேந்திரம். யாழ்ப்பாணம்: S.T.T.S. வெளியீடு, சங்கானை, 1வது பதிப்பு, சித்திரை 2021. (யாழ்ப்பாணம்: சாய்ராம் பிரின்டர்ஸ், பிரதான வீதி, சங்கானை).

iv, 61 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 16.5×11.5 சமீ., ISBN: 978-624-97603-0-1.

விஞ்ஞானத்துறையில் கல்வி கற்றுவரும் பாடசாலை மாணவியான சரணிகாவின் கன்னிப்படைப்பு இது. நேற்று நடந்தவற்றில் நன்மை பயக்கக் கூடியவற்றையும் தவறுகளையும் திருத்தப்படவேண்டியவற்றையும், சமுதாய மட்டத்திலிருந்து உன்னிப்பாகக் கவனித்தும் கணித்தும் தனது கவித்துவ ஆளுமைக்குள் அகப்படுத்திக் கொண்டுள்ளார். என்னுடன் நான், தாய், என் மனச் சித்திரம், என் ஆசான், உன்னை உனக்குள் தேடு, அறியா வயது, என்னை வாழவைத்த என் அன்னைக்கு, விடியும் தருணம், சகோதரா, போலி உலகம், என் காதல் பயணம், விழித்திடு, நீ யார்?, நாளைய நான், மங்கையவள் ஏக்கம், வாழ்க்கை, பிரிந்த நட்பின் வலி, வானம் வசப்படும், தொலைத்த நொடிகள், தத்தெடுத்த தாய், தனிமை, பிரிவின் வலி, வறுமையில் கல்வி, என் இறைவா, பள்ளிக் காலங்கள், சரித்திரம், சிரிப்பு, நன்றியுடன் சில வரிகள் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

15916 சுன்னாகம் திரு.கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை அவர்கள் வரலாற்றுச் சுருக்கம் (விழா மலர்-2).

கு.முத்துக்குமாரசுவாமிப் பிள்ளை. சுன்னாகம்: கு. முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை அவர்களின் எண்பத்தாறாம் ஆண்டு நிறைவுவிழாக் குழு, மயிலணி, 1வது பதிப்பு, 1986. (தெல்லிப்பழை: குகன் அச்சகம்). 48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ. சுன்னாகம்